No results found

    தப்பி ஓடியவர்களை விட்டுவிடுகின்றனர், எதிர்க்கட்சியினர் மீது சி.பி.ஐ. பாய்கிறது - காங்கிரஸ் தலைவர் ஆவேசம்


    பஞ்சாப் தேசிய வங்கி பணமோசடி வழக்கில் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் வைர வியாபாரி மெகுல் சோக்சி. அவருக்கு எதிராக பிறப்பித்த ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவை இன்டர்போல் நீக்கியது. எனினும், இந்தியாவில் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்கை இந்த நடவடிக்கை எந்த வகையிலும் பாதிக்காது. இந்த வழக்கு விசாரணையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இருக்கிறது. ஆனால், மோடிஜியின் நமது மெகுல் பாய், இன்டர்போலில் இருந்து விடுவிக்கப்படுகிறார். சிறந்த நண்பருக்காக பாராளுமன்றம் முடக்கப்படும்போது 5 ஆண்டுக்கு முன் தப்பியோடிய பழைய நண்பருக்கு உதவுவதில் இருந்து எப்படி மறுப்பு தெரிவிக்க முடியும்? என பதிவிட்டுள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال