No results found

    அதானி விவகாரம் எழுப்பினாலே பாராளுமன்ற மைக் அணைக்கப்படுகிறது - கார்கே குற்றச்சாட்டு


    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 29-ம் தேதி தொடங்கி நடந்தது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார். இதன்பின், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இதனையடுத்து, பிப்ரவரி 11-ம் தேதியுடன் முதல் அமர்வு கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. இதன்படி, இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கின. ஏப்ரல் 6-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும். இதில், உக்ரைன் விவகாரம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன.

    இரு அவைகளில் எதிர்க்கட்சிகளின் அமளியால், மதியம் 2 மணிவரை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் அவை கூடியதும், எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்தது. இதனை தொடர்ந்து, இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. இதன்பின், பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மோடிஜியின் கீழ் சட்ட விதிகளோ, ஜனநாயகமோ இல்லை. சர்வாதிகாரம் போன்று அவர்கள் நாட்டை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதன்பின், அவர்கள் ஜனநாயகம் பற்றி பேசி வருகின்றனர் என கூறியுள்ளார். அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என நாங்கள் கோரி வருகிறோம். நாங்கள் இந்த விவகாரம் பற்றி அவையில் எழுப்பும் போதெல்லாம், மைக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன. அவையில் அமளி தொடங்கி விடுகிறது என தெரிவித்துள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال