No results found

    சிங்கப்பூரில் கனிமொழி எம்.பி.யின் கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி


    தூத்துக்குடி தொகுதியின் தி.மு.க. எம்.பி.யாக இருப்பவர் கனிமொழி. இவருடைய கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்த கனிமொழி உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார். அரவிந்தனின் உடல்நிலை வேகமாக தேறி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் அதாவது ஒரு வார காலத்துக்குள் அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரவிந்தனின் உடல்நிலை குறித்து கனிமொழியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கேட்டு வருகிறார்.

    Previous Next

    نموذج الاتصال