No results found

    சர்வதேச ஊழல்வாதிகள், பிரதமர் மோடிக்கு ஆதரவு: காங்கிரஸ் விமர்சனம்


    ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியை 'தப்பி ஓடியவர்' என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டு வந்தது. அதற்கு பதில் அளித்த லலித் மோடி, ராகுல்காந்திக்கு எதிராக இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று எச்சரித்தார்.இந்தநிலையில், இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:- லலித் மோடி, பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருப்பவர். அவரது கோழைத்தனம்தான் தப்பிஓட வைத்தது. பா.ஜனதாவின் மெத்தனத்தால் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். சர்வதேச ஊழல்வாதிகள் எல்லாம் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வருவது, பிரதமரின் தரத்தை தாழ்த்துகிறது. இவ்வாறு அவர் கூறினார். ''ராகுல்காந்தியை அச்சுறுத்த பிரதமர் வெளிநாட்டில் இருந்து உதவி கேட்டிருக்கிறாரா?'' என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன்கெரா கேள்வி எழுப்பி உள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال