No results found

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை தொடர் சரிவால் விவசாயிகள் வேதனை


    திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த சில வாரங்க ளாகவே தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. 1 கிலோ ரூ.10க்கும் கீழ் சென்றதால் விவசாயிகளே வாகனங்களில் வைத்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம், அம்பி ளிக்கை, இடையகோட்டை, வடகாடு, கேதையறும்பு, விருப்பாச்சி, தங்கச்சி யம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி செய்ய ப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படு கிறது. பின்னர் நெல்லை, மதுரை உள்ளிட்ட நகரங்க ளுக்கும் கேரள போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கடந்த 1 மாதமாகவே மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. தற்போது 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.70க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. 1 கிலோ ரூ.5 முதல் ரூ.6 வரை மட்டுமே கிடைப்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். தக்காளியை பதப்படுத்தி இருப்பு வைக்க போதிய வசதி இல்லை என்றும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனவே தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    Previous Next

    نموذج الاتصال