No results found

    போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம்: ஹரிஷின் வங்கி கணக்குகள் முடக்கம்


    அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் தனியார் அமைப்பின் நிர்வாகி ஹரிஷின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஆடுதுறையில் உள்ள ஹரிஷின் வங்கி கணக்கை முடக்கி சென்னை போலீசார் பணப்பரிவர்த்தனை ஆய்வு செய்து வருகின்றனர். ஹரிஷின் வங்கி கணக்கில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும், இதுவரை 50 நபர்களுக்கு போலியாக அவர் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 4 பிரபலங்களுக்கு இலவசமாக டாக்டர் பட்டம் வழங்கிவிட்டு, மீதமுள்ளவர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு டாக்டர் பட்டம் வழங்கி மோசடியில் ஈடுபட்டதும், வசூல் செய்த பணத்தில், பாதியை நிகழ்ச்சிக்காகவும், மீதி பணத்தில் உல்லாசமாகவும் இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال