அரசு பொதுத்தேர்வு எழுதுவதற்கு 3 நாட்கள் பள்ளிக்கூடம் வந்தால் ஹால் டிக்கெட் தரப்படும் என்று நான் கூறவில்லை. கடந்த ஆட்சியில் கொரோனா காலத்தில் இந்த வழிமுறை பின்பற்றப்பட்டது. 3 நாள் பள்ளிக்கூடம் வந்தால் ஹால் டிக்கெட் என்பது தவறான செய்தியாகும். கல்வி ஆண்டில் 75 சதவீதம் வருகைப்பதிவு உள்ள மாணவர்களுக்கு மட்டுமே அரசு பொதுத்தேர்வு எழுத ஹால் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய கல்வி ஆண்டிலும் இதே முறை பின்பற்றப்படும். மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத பயப்படக்கூடாது. தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள் என்று முதலமைச்சரே அறிவுறுத்தியுள்ளார். அவர் மாணவர்களின் தந்தை ஸ்தானத்தில் இருந்து அறிவுரை வழங்கியதாக கூறினார். எனவே மாணவர்கள் பயப்படாமல் தேர்வு எழுதுங்கள். பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களின் பெற்றோர்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் உடனுக்குடன் தொடர்பு கொண்டு தேர்வு எழுத வராத காரணத்தை கேட்டறிந்து வருகின்றனர். மேலும் இனி வரக்கூடிய தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக பள்ளியில் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சையில் இன்று தமிழ்நாடு அரசின் புகைப்பட கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- தஞ்சாவூரில் இன்று அரசின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தேன். அரசின் சாதனைகள் அனைத்தும் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இதனை பார்க்க வேண்டும். தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் முதலமைச்சர் உத்தரவுப்படி 5 பேர் கொண்ட குழுவினர் வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூறுகின்ற கருத்துகளை நாங்கள் தெரிவித்து வருகிறோம். தேவைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.