No results found

    ஈகுவடாரில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 4 பேர் பலி


    தென் அமெரிக்க நாடான ஈகுவடாரின் கயாஸ் மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் சேதமடைந்தன. வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டன. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 4 பேர் பலியாகினர். மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

    Previous Next

    نموذج الاتصال