No results found

    பாலிவுட்டில் இருந்து வெளியேறியது ஏன்..? பிரியங்கா சோப்ரா சொன்ன அதிர்ச்சி தகவல்


    பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார்.

    கடந்த 2018- ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இருவரும் வாடகைத் தாய் மூலம் மால்தி மேரி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். ஹாலிவுட்டில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ரா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், ஏன் பாலிவுட்டில் இருந்து விலக என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பிரியங்கா கூறியதாவது, "பாலிவுட் சினிமாவில் இருந்து நான் ஓரம் கட்டப்பட்டேன். பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய தொடங்கின. நான் சிலருடன் மாட்டிறைச்சி சாப்பிட்டிருக்கிறேன். எனக்கு அங்கு நடந்த அரசியல் சரியாகபடவில்லை. எனக்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது. அதே நேரத்தில் ஹாலிவுட்டில் வாய்ப்பு வந்ததால் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன்" என்று கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال