No results found

    நன்கொடை அளித்த வெளிநாட்டு பக்தர்களின் விவரங்களை அளிக்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு மத்திய அரசு நிபந்தனை


    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்யம் வரும் பக்தர்கள் உண்டியலில் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதேபோல் வெளிநாடுகளில் வாழும் ஏழுமலையானின் பக்தர்கள் தரிசனத்திற்கு வரும்போது அந்நாட்டு கரன்சி நோட்டுகளை உண்டியலில் செலுத்துகின்றனர். நேரில் தரிசனத்திற்கு வர முடியாத பக்தர்கள் ஆன்லைன் மூலம் காணிக்கை செலுத்துகின்றனர். வெளிநாட்டு பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறுவதற்காக வெளிநாட்டு பங்களிப்பு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் திருப்பதி தேவஸ்தானம் உரிமம் பெற்று இருந்தது. கொரோனா தொற்று காரணமாக 2018-ம் ஆண்டிற்கு பிறகு உரிமத்தை தேவஸ்தான அதிகாரிகள் புதுப்பிக்கவில்லை.

    இதனால் வெளிநாட்டு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய ரூ.30 கோடி வெளிநாட்டு கரன்சிகள் தேவஸ்தானம் சார்பில் டெபாசிட் செய்ய முடியாமல் பாரத ஸ்டேட் வங்கியில் முடங்கி உள்ளது. தங்களது பெயர்களை வெளியிட விரும்பாத சில பக்தர்கள் காணிக்கையை ஆன்லைனில் செலுத்தி உள்ளனர். பணம் செலுத்தியவர்களின் விவரம் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தெரியவில்லை. இதனால் வெளிநாட்டில் இருந்து ஆன்லைனில் பணம் செலுத்தியவர்களின் தகவல்களை தேவஸ்தான அதிகாரிகளால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்க முடியவில்லை. இந்த நிலையில் மதிய உள்துறை அமைச்சகம், வெளிநாட்டு பங்களிப்பு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் பெற்ற உரிமத்தை புதுப்பிக்காதது, விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாதது மற்றும் உள்துறை வழிகாட்டுதல் படி வருமான விவரங்களை சரியானபடி சமர்ப்பிக்காததால் கிடப்பில் உள்ள ரூ. 30 கோடிக்கு, ரூ 3.19 கோடியை அபராதமாக விதித்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நன்கொடை அளித்த வெளிநாட்டு பக்தர்களின் விவரங்களை துல்லியமாக அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் உரிமத்தை புதுப்பிக்க அனுமதி வழங்கி உள்ளது. மேலும் வங்கியில் கிடப்பில் உள்ள ரூ. 30 கோடியை தேவஸ்தானம் பெயரில் டெபாசிட் செய்யவும் பாரத ஸ்டேட் வங்கி ஒப்புதல் வழங்கி உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال