No results found

    வந்தே பாரத் ரெயிலை இயக்கிய ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட்


    மகாராஷ்டிரா மாநிலம் சதாரா பகுதியை சேர்ந்தவர் சுரேகா யாதவ். 55 வயதான இவர் ஆசியாவில் முதல் பெண் லோகோ பைலட் என்ற பெருமையை பெற்றவர். கடந்த 1988-ம் ஆண்டு முதல் பெண் லோகோ பைலட் சான்றிதழை பெற்றார். அவரது சாதனைகளுக்காக அவர் மாநிலம் மற்றும் தேசிய அளவில் விருதுகள் பெற்றுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மும்பை-லக்னோ சிறப்பு ரெயிலை இயக்கிய அனைத்து பெண்களும் கொண்ட முதல் பெண் லோகோ பைலட் ஆனார். இந்நிலையில் தற்போது சுரேகா யாதவ் மகாராஷ்டிரத்தில் உள்ள சோலாபூரில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கி உள்ளார். இதன் மூலம் வந்தே பாரத் ரெயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமையை சுரேகாயாதவ் பெற்றுள்ளார். இதையடுத்து சுரேகாவின் புகைப்படத்தை பகிர்ந்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال