No results found

    இன்று மகிழ்ச்சியை தரும் அசோகாஷ்டமி விரதம்


    இன்று (புதன்கிழமை) அஷ்டமி தினமாகும். நேற்று இரவு 10.13 மணிக்கு இந்த அஷ்டமி திதி தொடங்கியது. இன்று இரவு 11.48 மணி வரை அஷ்டமி உள்ளது. கரி நாளாக வரும் இன்றைய தினத்தில் அஷ்டமி வழிபாடுகள் சிறப்பாக செய்யப்பட வேண்டும். இன்றைய அஷ்டமிக்கு சிறப்பு ஒன்று உண்டு. அதாவது சோகத்தை விரட்டி மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அஷ்டமியாக இன்றைய அஷ்டமி கருதப்படுகிறது. சோகம் என்றால் வருத்தம், அசோகம் என்றால் வருத்தம் நீங்குதல் (மகிழ்ச்சி). சோகத்தை நீக்கி மகிழ்ச்சியைத் தரும் அஷ்டமி என்பதால் அசோகாஷ்டமி என்று பெயர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அரைத்து கைகளில் பூசிக்கொள்கிறார்கள். சீதா தேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நன்னாளே அசோகாஷ்டமி நாளாகும். எனவே இன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களைப் பயிர் செய்யலாம். தண்ணீர் ஊற்றலாம். 3 முறை வலம் வரலாம்.

    Previous Next

    نموذج الاتصال