No results found

    தகுதி நீக்கத்தால் எனது குரலை ஒடுக்க முடியாது- ராகுல் காந்தி


    எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

    * இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. 

    * பாராளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூற முடியவில்லை. 

    * அதானி விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் எனது பேச்சுகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. 

    * பாராளுமன்றத்தில் என்னைப்பற்றி தவறான குற்றச்சாட்டுக்களை மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். 

    * பாராளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பியதில் இருந்து பிரச்சனை தொடங்கியது.

    * தகுதி நீக்கத்தைப்பற்றி எனக்கு கவலை இல்லை. 

    * தகுதி நீக்கத்தால் எனது குரலை ஒடுக்க முடியாது. 

    * அதானி பிரச்சனையை திசை திருப்பும் நாடகம். 

    * பிரதமர் மோடியே நோக்கி 3 கேள்விகளை முன்வைத்தேன். 

    * அதானி குழுமத்தில் ரூ.20,000 கோடி முதலீடு செய்த நிறுவனங்கள் யாருடையது, அந்த பணம் யாருடையது? 

    * மோடி வெளிநாடு சென்றபோதொல்லாம் அதானி குழுமத்துக்கு தொழில் ஒப்பந்தங்கள் கிடைத்ததை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டேன். 

    * பிரதமருக்கும் அதானிக்குமான தொடர்பு குறித்து பாரளுமன்றத்தில் புதிய தகவலை பேசிவிடுவேன் என்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன். 

    * ஒருபோதும்வெளிநாடுகளை இந்திய ஜனநாயகத்தில் தலையிடும்படி நான் கேட்டதில்லை. 

    * அரசியல் நீதி என்பது எனது ரத்தத்தில் கலந்துள்ளது. 

    * எனது பேச்சு மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    * எனக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகளுக்கு நன்றி. அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال