No results found

    ஆலந்தூர் மெட்ரோ ரெயில் பயணிகளின் கவனத்திற்கு...


    மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி, பயணிகளின் வசதி மற்றும் பார்க்கிங் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படவுள்ளது. இதனால், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளுக்காக மார்ச் 24-ந்தேதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது. இதற்கு மாற்றாக பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ நிலைய வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்த தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال