திருமங்கலத்தில் உள்ள வீட்டில் முன்னாள் எம்.பி. சித்தனை இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:- காவல் நிலையத்தில் 2, 3 நாட்களுக்கு முன்பு நடந்த தி.மு.க.வினரின் சம்பவங்களை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல. சட்டம்-ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும். அதற்கு முதல் உரிமை கொடுக்க வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக உள்ளது. மத்திய அளவில், அகில இந்திய அளவில் பா.ஜ.க. வலுவான நிலையில் இருக்கிற காரணத்தால் பெரும்பாலான மாநிலங்களில் வலுவோடு வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் தேர்தலை சந்தித்து இந்த முறை நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். அ.தி.மு.க. தேர்தல் அறிவிப்பு அந்த கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. வருகிற நாட்களில் இந்த கூட்டணி வலுப்பெறுவதற்கு நல்ல வாய்ப்பை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. தேர்தலால் தொண்டர்களுக்கு உற்சாகம்: கூட்டணி வலுப்பெறுவதற்கு நல்ல வாய்ப்பு- ஜி.கே.வாசன்
Tamil News