நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சாகுந்தலம் திரைப்படத்தை பார்த்த நடிகை சமந்தா படம் தொடர்பாக பகிர்ந்திருந்தார். அதில், "கடைசியாக இன்று சாகுந்தலம் திரைப்படத்தை பார்தேன். குணசேகர் சார் நீங்கள் என் இதயத்தை வென்றுவிட்டீர்கள். என்ன ஒரு அழகான படம். மிகப்பெரிய காவியத்தை அன்புடன் உயிர்பித்துள்ளீர்கள். இந்த படத்தினை ரசிகர்கள் உணர்ச்சிகரமாக கொண்டாடுவதை காண ஆர்வமாக உள்ளேன்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகை சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் ஐதராபாத்திலுள்ள ஸ்ரீ பேடம்மா தள்ளி கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு படம் வெற்றி பெறுவதற்காக சமந்தா சிறப்பு பூஜை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.