No results found

    கோவிலில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது தீ விபத்து- அலறியடித்து ஓடிய பக்தர்கள்


    ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் தனகு மண்டல் துவா பகுதியில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டம் காரணமாக பல்வேறு பூஜை ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. கோடைக் காலம் என்பதால் பக்தர்களின் வருகைக்காக பனை ஓலை கொண்டு நிழற்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென பந்தல் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க முயன்ற நிலையில் தீ கோவில் முழுவதும் பரவியது. இதனால் கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினை சேர்ந்த ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    Previous Next

    نموذج الاتصال