945 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரதான குழாய்களும், கிளைக்குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதில் 1,045 குளம், குட்டைகளுக்கு ஆண்டுக்கு 1.5 டி.எம்.சி. தண்ணீர் நிரப்பப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 5 இடங்களிலும், கோவையில் அன்னூர் அருகே குன்னத்தூராம்பாளையத்திலும் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், 50 லட்சம் பொதுமக்களும் பயன் பெறுவார்கள். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 நீரேற்று நிலையங்களிலும் கடந்த ஒரு மாத காலமாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. ஈரோடு காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து நீர் வெள்ளோட்டம் விடும் பணி நடந்து வருகிறது.
கடந்த வாரம் 5-வது நீரேற்று நிலையமான எம்மாம்பூண்டியில் இருந்து நீர் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த நீர் நேற்று மதியம் 6-வது நீரேற்று நிலையமான அன்னூர் நீரேற்று நிலையத்திற்கு வந்தது. அத்திக்கடவு திட்ட உதவி பொறியாளர் கவிதா மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் வெள்ளோட்ட பணியை கண்காணித்தனர். நீரோற்று நிலையத்துக்கு அத்திக்கடவு-அவினாசி நீர் வந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அத்திக்கடவு-அவினாசி திட்ட ஆர்வலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என ஏராளமானார் நீரேற்று நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் பூக்கள் தூவி நீரினை வரவேற்றனர்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்காக 60 ஆடுகளாக பலகட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். அந்த போராட்டங்களின் விளைவாக அத்திக்கடவு நீர் எங்கள் பகுதிக்கு வந்துள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நீர் வந்ததன் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாய பரப்பும், கால்நடை வளர்ப்பும் இங்கு அதிகரிக்கும். இதுதவிர குடிநீர் பிரச்சினையும் தீர்வு கிடைக்கும். விரைவில் விடுபட்ட குளங்களுக்கும் அத்திக்கடவு திட்ட நீர் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அன்னூர் நீரேற்று நிலையத்திற்கு வந்த நீர், நீரேற்று நிலையம் நிறைந்ததும், அங்கிருந்து அருகே உள்ள குன்னத்தூராம்பாளையம் குளத்திற்கு தண்ணீர் சென்றது. மாலை வரை குளத்துக்கு தண்ணீர் செல்வதை மக்களும், விவசாயிகளும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.