No results found

    16வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம் - ரசிகர்கள் உற்சாகம்


    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று போட்டி தொடங்கும் முன் பிரமாண்டமான ஆடல் , பாடலுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.ஐ.பி.எல். போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது இதுவரை நடந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக எம்.எஸ்.டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் தலா ஒரு தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் உள்ளூர் மைதானம், வெளியூர் என போட்டி முறையில் ஆடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த 3 ஆண்டாக பொதுவான இடத்தில் போட்டி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال