No results found

    Google Tamil News | வீடியோ கால் செய்து நிர்வாணமாக தோன்றிய பெண்... பதறியடித்து போலீசில் புகார் அளித்த பாஜக தலைவர்


    கர்நாடக மாநிலத்தின் மூத்த பாஜக எம்.எல்.ஏ. திப்பாரெட்டி (வயது 75). இவருக்கு அறிமுகம் இல்லாத பெண் ஒருவர் கடந்த மாதம் 31ம் தேதி வாட்ஸ்அப் வீடியோ காலில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த பெண் தனது ஆடைகளை அவிழ்க்கத் தொடங்கி உள்ளார். இதனால் பதறிப்போன திப்பாரெட்டி, இணைப்பை துண்டித்துள்ளார். அதன்பின்னர் அந்த பெண், திப்பாரெட்டிக்கு ஆபாசமான வீடியோவை அனுப்பி உள்ளார். இதையடுத்து திப்பாரெட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னிடம் கீழ்த்தரமான வகையில் நடந்துகொண்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனுவில் கூறி உள்ளார். பின்னர் இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எனக்கு முதல் அழைப்பு வந்தபோது, நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் அழைப்பு வந்தது. அப்போதுதான் அந்த பெண் தன் ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்தார். உடனே போனை எனது மனைவியிடம் கொடுத்தேன். அவர் இணைப்பை துண்டித்து அந்த நம்பரை பிளாக் செய்தார். காவல்துறை ஆய்வாளரின் ஆலோசனையின் பேரில், காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தேன்" என்றார்.

    Previous Next

    نموذج الاتصال