No results found

    Google Tamil News | சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்பு


    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. மேலும் அவருடைய அலுவல் பணிகளும் முடித்து வைக்கப்பட்டன. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்க உள்ளார். புதிதாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதன்மூலம் நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பார். கடந்த 1998-ம் ஆண்டு கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், 2013-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி.ஒய்.சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் 10 வரை தலைமை நீதிபதியாக நீடிப்பார்.

    Previous Next

    نموذج الاتصال