No results found

    Google Tamil News | எனது போனை ஒட்டுக்கேட்கிறார்கள்... தெலுங்கானா ஆளுநர் பரபரப்பு புகார்


    தெலங்கானாவில் சந்திரசேர ராவ் தலைமையில் ராஷ்டிரிய தெலுங்கானா சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டை முதல்வர் சந்திரசேகர ராவ் எடுத்துள்ள நிலையில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் முதல்வர் சந்திரசேர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கியது. இது நாளுக்கு நாள் அதிகரித்து. மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தனது தொலைபேசிகள் ஒட்டுக்கப்படுவதாக சந்தேகம் உள்ளது என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் தெரிவித்திருக்கிறார். முன்னாள் உதவியாளர் துஷார் தீபாவளி வாழ்த்து சொன்னதில் இருந்து தனது போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக சந்தேகம் உள்ளது என்கிறார் தமிழிசை. மேலும் தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுப்பதில் ஜனநாயகமற்ற சூழல் நிலவுகிறது, தேவையில்லாமல் ஆளுநர் மாளிகையை குற்றம்சாட்டி பேசுகின்றனர் என்றும் ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال