No results found

    Google Tamil News | இஸ்ரேல் பிரதமராக நேதன்யாகு தேர்வு - பிரதமர் மோடி வாழ்த்து


    இஸ்ரேலில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் பெஞ்சமின் நேதன்யாகு. லிகுட் கட்சியை சேர்ந்த இவர் 15 ஆண்டுகள் இஸ்ரேலின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 1996 முதல் 1999 வரையும், 2009 முதல் 2021 வரையும் இஸ்ரேலின் பிரதமராக நேதன்யாகு பதவி வகித்தார். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சி மூலம் நேதன்யாகு பிரதமரானார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமர் பதவியில் இருந்து நேதன்யாகு விலகியதை தொடர்ந்து நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், யாமினா கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார்.

    இஸ்ரேல் பிரதமராக நப்தாலி பென்னட் தலைமையிலான அரசு சுமார் ஓராண்டு காலம் ஆட்சி செய்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அவரது அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்பப்பெற்றன. இதனால் அந்நாட்டின் பாராளுமன்றம் மீண்டும் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாரானது. நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, இஸ்ரேலில் சமீபத்தில் பொதுத்தேர்தல் நடந்தது. இது அங்கு 4 ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் ஆகும். இத்தேர்தலில் மொத்தமுள்ள 120 தொகுதிகளில் 65 தொகுதிகளுக்கும் மேல் நேதன்யாகுவின் லிகுட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால் பெரும்பான்மை பலத்துடன் இஸ்ரேலின் புதிய பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு தேர்வாகிறார். விரைவில் அவர் பொறுப்பு ஏற்கவுள்ளார். இந்நிலையில், இஸ்ரேல் பிரதமராக தேர்வாகியுள்ள பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பிரதமர் நரெந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியா-இஸ்ரேல் மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் உறுதிப்படுத்த எங்களின் கூட்டு முயற்சிகளைத் தொடர எதிர்நோக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال