மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கொல்கல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்த (ஐஐஎம்) மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது- ஜம்மு காஷ்மீருக்கு 370வது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, அன்றைய அரசியல் காரணமாக 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. சிறப்பு அந்தஸ்து என்பது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். ஆனால் இவ்வளவு காலம் அது நீடிக்க என்ன காரணம்? சிறப்பு அந்துஸ்து காரணமாக அங்கே (ஜம்முகாஷ்மீரில்) இவ்வளவு குழப்பமான பிரச்சினை இருந்தது, உலகம் முழுவதும் அதைப் பயன்படுத்தியது. இது நாட்டின் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இன்றைய அரசியல், தேசத்தின் நலனுக்கு இடையூறாக இருக்கக்கூடாது. எல்லா அரசியல்வாதிகளும் முதலில் அந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். தேசிய நலனுக்கு முதலிடம் கொடுப்பது முக்கியம். அரசியல் காரணமாக நமது நாட்டின் எல்லைகள் பாதிக்கப்படக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Google Tamil News | இன்றைய அரசியல் நமது தேச நலனுக்கு தீங்கு விளைவிக்க கூடாது- வெளியுறவு மந்திரி பேச்சு
Tamil News