No results found

    Google Tamil News | சோதனை அடிப்படையில் இன்று அறிமுகமானது டிஜிட்டல் கரன்சி- 9 வங்கிகள் மூலம் பரிவர்த்தனை


    காகித வடிவிலும்ம், உலோக வடிவிலும் உள்ள பணம் தற்போது டிஜிட்டல் கரன்சியாக உருவெடுத்துள்ளது. காகித பணத்துக்கு நிகராக டிஜிட்டல் கரன்சியை சில நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன. இந்தியாவிலும் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையின் போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரிசர்வ் வங்கி இன்று சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கி, எச்.எஸ்.பி.சி. ஆகிய 9 வங்கிகள் மூலமாக டிஜிட்டல் கரன்சி இன்று வெளியிடப்பட்டது அரசு பங்கு பத்திரங்கள் பரிமாற்றத்திற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களை பொறுத்து, இதர பரிமாற்றங்களுக்கும் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. முதல் நாள் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தி 9 வங்கிகள் 48 பரிவர்த்தனைகள் மேற்கொண்டதாகவும், மொத்தம் 275 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    Previous Next

    نموذج الاتصال