No results found

    டுவிட்டர், அமேசானை தொடர்ந்து 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள் | Google Tamil News


    பொருளாதார சூழல் காரணமாக செலவுகளைக் குறைப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதன்படி பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இப்படி முக்கிய நிறுவனங்களில் 2022-ம் ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்கள் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் பல மாதங்களாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல் தொடர்ந்து எச்சரிக்கை மட்டுமே விடுத்து வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. யாரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்கப் போவதில்லை. பணியாளர்களின் செயல் திறன்கள் கண்காணிக்கப்பட்டு 2023-ம் ஆண்டில் செயல் திரை கண்காணிக்க உள்ளது. 2023-ம் ஆண்டில் 10,000 ஊழியர்கள் வரை பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Previous Next

    نموذج الاتصال