No results found

    Google Tamil News | உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது - முதல்வர் ஸ்டாலின் பேச்சு


    திண்டுக்கல் அருகிலுள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமோனோர் பங்கேற்றனர். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காந்தி கூறிய கொள்கைகள் இந்தியாவை ஒழுங்குபடுத்தும் விழுமியங்களாக உள்ளன. வட இந்தியர் அனைவரும் தமிழைக் கற்க வேண்டும் என்று சொன்னவர் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தியை அரையாடை கட்டவைத்தது தமிழ் மண். உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களும் கவனிக்கும் வகையில் தமிழகத்தின் கல்வித் திட்டங்கள் உள்ளன என தெரிவித்தார். டாக்டர் பட்டம் பெற்ற இசைஞானி இளையராஜா, உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர வேண்டும் என பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    Previous Next

    نموذج الاتصال