No results found

    குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ரோபோவை களம் இறக்கியது பாஜக | Google Tamil News


    நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 1-ந் தேதி மற்றும் 5ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. டிசம்பர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் மக்களை கவர அரசியல் கட்சியினர் பல்வேறு நூதன முறை பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.க.வின் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் ஹர்ஷத் பட்டேல் தேர்தல் பிரச்சாரத்திற்காக ரோபோவை தயாரித்துள்ளார். இதையடுத்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரச்சாரத்திற்காக இந்த ரோபோவை பா.ஜ.க. எம்.எல்.ஏ. பங்கஜ் தேசாய் களம் இறக்கி உள்ளார்.

    பாஜகவின் சாதனைகள் மற்றும் பாஜக வேட்பாளர்கள் குறித்து மக்களிடத்தில் இந்த ரோபோ அறிமுகம் செய்கிறது. மேலும் கட்சி பொதுக் கூட்டங்களிலும் பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை ரோபோ வழங்குகிறது. மேலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பும் வகையில் இதில் ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளன. பா.ஜ.க.வின் இந்த நூதன பிரச்சாரத்தை அந்த தொகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். பல தொகுதிகளில் வீடு வீடாக சென்று பாஜகவுக்காக பிரச்சாரம் செய்ய இது போன்ற மேலும் பல ரோபோக்களை களமிறக்க உள்ளதாகவும் ஹர்ஷத் பட்டேல் தெரிவித்துள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال