No results found

    Google Tamil News | தி.மு.க.வை ஆக்கப்பூர்வமாக எதிர்ப்போம் - அண்ணாமலை பேட்டி


    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக மக்களுக்கு பா.ஜ.க. மீது அன்பு பெருகி வருகிறது. தமிழக மக்களின் அன்புக்குள்ளாகி இருக்கிறார் பிரதமர் மோடி. பிரதமரை நேற்று சந்திக்க வாய்ப்பு கிடைத்தது, அப்போது தமிழ்நாடு மக்களை குறித்தும், தமிழகத்தில் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். தமிழ்நாடு மக்களிடம் பிரதமர் அளவுக்கதிகமாக பாசம் கொண்டவர். கொட்டும் மழையிலும் பெண்கள் கைக்குழந்தையுடன் பிரதமரை காண வந்தது நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா வருகை ஊக்கமளிக்கிறது. தலைவர்களை உற்சாகமூட்டிவிட்டு சென்றிருக்கிறார் அமித்ஷா. பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து சென்றது மகிழ்ச்சியான தருணம். அமித்ஷாவை பொறுத்தவரை நமது தாய்மொழியை தான் பிரதானமாக வைக்கவேண்டும் என்கிறார். பொறியியல் படிப்பை தமிழ் வழியில் கொண்டுவர வேண்டும் என அமித்ஷா கூறியுள்ளார். தி.மு.க.வை பொறுத்தவரை பா.ஜ.க.வை எதிரியாக பார்க்கிறார்கள், எங்களை பொறுத்தவரை சித்தாந்த அடிப்படையில் தி.மு.க.வை எதிரியாக பார்க்கிறோம் என தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال