No results found

    போராடும் கவுரவ விரிவுரையாளர்களை நீக்க முடிவா? உயர் கல்வித்துறை செயலாளர் விளக்கம் | Google Tamil News

    அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள், தங்களை உடனடியாக பணி நியமனம் செய்யவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். வகுப்புகளை புறக்கணித்து 2வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தும் கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் கவுரவ விரிவுரையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த தகவலை உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் மறுத்து, விளக்கம் அளித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் பணிநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல் உண்மைல்ல என்றும் அவர் கூறினார். மேலும் தமிழகம் முழுவதும் 4000 உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال