உக்ரைனில் புகுந்து கடந்த 8 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷியப் படைகள் கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐ.நா.பொதுச் சபையில் நேற்று ரஷியாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
முன்னாக வாக்கெடுப்பு மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய ஐ.நா.சபைக்கான இந்திய பிரதிநிதி ருச்சிரா கம்போஜ், உக்ரைன்-ரஷியா இடையேயான கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைதி பேச்சுவார்த்தை மட்டும் ஒரே தீர்வாக இருக்கும் என்றார். இந்த பிரச்சினையில் அமைதிக்கான பாதையை உருவாக்க அனைத்து நாடுகளும் தங்களது தூதரக ரீதியான நடவடிக்கைக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், இது தொடர்பான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தார்.
adopts
annexation
condemning
general assembly
Google Tamil News
regions
resolution
russias
ukraines
united nations