No results found

    சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு | Google Tamil News


    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டம் உதவி மையம் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்ததால் அந்த நபர் தீக்குளித்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தீக்குளித்த நபர் படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என தெரியவந்துள்ளது.

    Previous Next

    نموذج الاتصال