இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் ஆவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற புதிய கல்விக் கொள்கை உறுதுணையாக இருக்கும். புதிய கல்விக் கொள்கை சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இது மிகப்பெரிய சீர்திருத்தம். இது முற்போக்கானது, தொலைநோக்கு பார்வை கொண்டது. அது மட்டுமின்றி 21ம் நூற்றாண்டின் தேவைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வியுடன் பட்டங்களை இணைப்பது நமது கல்வி முறையிலும் சமூகத்திலும் பெரும் சுமையாக உள்ளது. இதனால் படித்து வேலைவாய்ப்பு இல்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண, மாணவர்கள் பட்டம் பெறுவதில் மட்டும் கவனம் செலுத்துவதை தவிர்த்து. அவர்களிடம் உள்ள திறமை, அறிவு, அணுகுமுறை ஆகியவற்றுக்கே தேசிய கல்விக் கொள்கை முன்னுரிமை அளிக்கிறது. வாழ்க்கையில் வெற்றியடைய மாணவர்கள் பலவகையான திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். நடப்பு கால திறன்களுடன் இருப்பவர்கள் உலகில் இன்று வியத்தகு செயல்களை செய்கிறார்கள் என்பதற்கு ஏரளாமான உதாரணங்கள் உள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.