No results found

    நிதிஷ்குமார் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியம் இல்லை - பிரசாந்த் கிஷோர் தாக்கு | Google Tamil News


    பீகாரில் பாத யாத்திரை நடத்தி வரும் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளார். பா.ஜ.க.வுக்கு எதிராக நிதிஷ்குமார் தேசிய அளவில் கூட்டணி உருவாக்கி வருவதாக மக்கள் நினைத்து வருகின்றனர். ஆனால் அவர் பா.ஜ.க.வுடன் தொடர்பு வைத்திருப்பதை அறியும்போது அவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைவார்கள். ஏனெனில் அவர் தனது கட்சி எம்.பி.யும், மாநிலங்களவை துணைத்தலைவருமான ஹரிவன்ஷ் மூலம் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளார். இதற்காகவே அவரது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்யுமாறு நிதிஷ்குமார் கேட்கவில்லை. தேவை ஏற்படும்போதெல்லாம் மீண்டும் பா.ஜ.க.வுக்குச் சென்று அவரால் இணைந்து செயல்பட முடியும் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். அப்படி கூட்டணி வைத்தால் ஆச்சரியம் இல்லை என தெரிவித்தார். பிரசாந்த் கிஷோரின் இந்த குற்றச்சாட்டை ஐக்கிய ஜனதாதளம் மறுத்துள்ளது.

    Previous Next

    نموذج الاتصال