உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் அங்குள்ள புனித கோவில் பெரும் பாதிப்புக்கு ஆளானது. இதையடுத்து கோவிலை சீரமைக்கும் பணிகள் நடந்து வந்தது. தற்போது குளிர்காலம் தொடங்க இருப்பதை தொடர்ந்து இக்கோவில் மூடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி இக்கோவிலுக்கு செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார். வருகிற 23-ந் தேதி அவர் கேதார்நாத் செல்வார் என தெரிகிறது. கேதார்நாத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் குறித்த தகவலை பிரதமர் அலுவலகம் ஆய்வு செய்தது. இதையடுத்து உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, கேதார்நாத் சென்று அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, மாநிலத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகளுக்கு ஏற்படும் தடைகளை விலக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டேன் என்று கூறினார். கேதார்நாத் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தீபாவளியையொட்டி 23-ந்தேதி கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் | Google Tamil News
Tamil News