No results found

    Google Tamil News | காஷ்மீரில் இதுவரை 30 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது- பிரதமர் மோடி


    காஷ்மீரில் மத்திய அரசு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- 2019ம் ஆண்டு முதல் இதுவரை ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன என்றும், இவற்றில் கடந்த 1 முதல் 1½ ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் வேலைகள் வழங்கப்பட்டு உள்ளன என்றும் என்னிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீர் ஒவ்வொரு இந்தியனின் பெருமையாகும். பழைய சவால்களை விட்டு விட்டு புதிய வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும். வேகமான வளர்ச்சிக்கு புதிய அணுகுமுறையிலும், புதிய சிந்தனையுடனும் பணியாளர்கள் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.

    நாம் அனைவரும் இணைந்து ஜம்மு காஷ்மீரை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அரசு பணி நியமனங்களை பெற்ற 30 ஆயிரம் பேருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அரசாங்க திட்டங்கள் பலன்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் முயற்சியாகும். காஷ்மீரில் 2 எய்ம்ஸ், 7 புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு மூலம் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காஷ்மீருக்கு ரெயில்கள் மூலம் இணைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு மோடி பேசினார்.

    Previous Next

    نموذج الاتصال