No results found

    Google Tamil News | அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே இன்று பதவி ஏற்பு


    கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதையடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இந்நிலையில் காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மல்லிகார்ஜுன் கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மொத்தம் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் வாக்களித்தனர். இதில் பதிவான வாக்குகள் கடந்த 19-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூருக்கு 1000 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைய அலுவலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே இன்று பதவி ஏற்கிறார்.இதன் மூலம் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சி தலைவர் பதவியை வகிக்க உள்ளது குறிப்பிடத்ததக்கது.

    Previous Next

    نموذج الاتصال