No results found

    கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து - தமிழகத்தை சேர்ந்த 3 பேரின் உடல்கள் சென்னை வந்தடைந்தது | Google Tamil News


    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மிகவும் புகழ்பெற்ற புனித தலம் ஆகும். கேதார்நாத்-குப்தகாசி இடையே ஆர்யன் ஏவியேசன் என்ற தனியார் நிறுவனம் ஹெலிகாப்டர் சேவையை இயக்கி வருகிறது. வசதியான பக்தர்கள் அந்த ஹெலிகாப்டர் சேவையைப் பயன்படுத்தி கோவிலுக்குச் சென்று விட்டு திரும்புவது வழக்கம். கடந்த 18-ம் தேதி காலை கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம் முடித்த 6 பக்தர்கள் குப்தகாசிக்கு அந்த ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். வழியில், ருத்ரபிரயாக் மாவட்டம் கருட் சாட்டி மலைப்பகுதியில் வந்தபோது அந்த ஹெலிகாப்டர் திடீரென வெடித்துச் சிதறியது. காலை 11.45 மணிக்கு நடந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 6 பக்தர்களும், விமானியும் பலியானார்கள். மோசமான வானிலை காரணமாக எதிர்ப்புறத்தில் எதுவுமே தெரியாததால் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர்கள் என்று உத்தரகாண்ட் மாநில போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் சென்னை வந்தடைந்தது. அவர்களது உடல்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    Previous Next

    نموذج الاتصال