No results found

    Google Tamil News | நமது கலாச்சாரங்களை நமது மக்களுக்கே மீண்டும் அறிமுகப்படுத்துவது துர்திஷ்டவசமானது- ஆளுநர் ஆர்.என்.ரவி


    வாரணாசியில் அடுத்த மாதம் 17-ந் தேதி தொடங்கி ஒரு மாத காலத்திற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே இருந்த ஆழமான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை மீண்டும் மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன. சென்னையில் உள்ள செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், மைசூருவில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் மற்றும் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் ஆகியவை இந்த நிகழ்ச்சியின் பங்குதாரர்களாக உள்ளன.

    இந்நிலையில் இந்த விழா குறித்த அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளதாவது: காசியும், காஞ்சிபுரமும் சிவபெருமானின் இரு கண்கள் என்று புராணம் கூறுகிறது. வாரணாசிக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள தொடர்பு 1,000 ஆண்டுகளுக்கும் மேலானது. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை போன்ற தமிழ் இதிகாசங்களில் இந்த இணைப்பு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், வானியல் போன்ற ஆய்வுகளின் சிறந்த மையங்களாக காசியும் காஞ்சிபுரமும் இருந்ததால் அது குறித்து விவாதிக்கப்படுகின்றன. காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதமர் மோடி போன்ற ஒரு துணிச்சலான தலைவரின் துணிச்சலான பரிசோதனை முயற்சியாகும். இந்த நிகழ்வுக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. காசி-தமிழ்ச் சங்கமத்தில் மக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும். நமது நாட்டின் பல்வேறு வகையான கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை நமது நாட்டு மக்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நிலை முரண்பாடானது, தூர்திருஷ்டவசமானது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال