நாட்டு மக்களிடம் புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடி அறிவித்தார். கறுப்பு பணத்தை ஒழிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். பண மதிப்பு இழப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன் மொத்தம் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையே நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன், பி.வி. நகரத்தா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்றும், இந்த விசாரணை இன்று (அக்டோபர்-12) தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இன்று தொடங்கியது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடும் போது "தனிநபர் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை நிர்வாக ரீதியில் சரி செய்து கொள்ள வேண்டும். அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்' என்று வாதிட்டார்.
against
before
began
bench
BJP
case
Central Government
constitution
demonetisation
Google Tamil News
Govt of India
India
supreme-court