No results found

    கெம்பேகவுடா வெண்கல சிலையை நவம்பர் 11ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் | Google Tamil News


    கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கெம்பேவுடாவுக்கு 108 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதன் திறப்பு விழா அடுத்த மாதம் 11-ம் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கிறார். இதுகுறித்து ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமியை உயர்கல்வித்துறை மந்திரி பெங்களூருவில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை அவர் கேட்டு பெற்றார். மேலும் அவர் 20-க்கும் மேற்பட்ட ஒக்கலிகர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சிலை திறப்பு குறித்து கர்நாடகம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. இதை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழிப்புர்ணவு பேரணி வெற்றி பெற வேண்டும் என்று பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளதாக மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال