No results found

    Google Tamil News | புதிய கின்னஸ் சாதனை படைத்தது அயோத்தி தீப உற்சவ திருவிழா

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்று 6-வது ஆண்டாக தீப உற்சவ திருவிழாவை பிரதமர் மோடி தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.

    இதையொட்டி சரயு நதிக்கரை படித்துறையில் மொத்தம் 15 லட்சத்து 76 ஆயிரம் மண் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன. அப்போது ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் என்ற முழக்கம் அயோத்தி முழுவதும் எதிரொலித்தது.

    அயோத்தியில் உள்ள அவத் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் இதில் பங்கேற்றனர். ஒரே நேரத்தில் இவ்வளவு விளக்கு ஏற்றப்பட்டது புதிய கின்னஸ் சாதனையை படைத்தது. பிரதமர் மோடி முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள், நேரில் பார்த்தனர்.

    புதிய கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழை அந்நிறுவன அதிகாரிகள், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் வழங்கினர். கடந்த ஆண்டு நடைபெற்ற அயோத்தி தீப உற்சவ திருவிழாவில் 9 லட்சத்து 41 ஆயிரம் மண் விளக்குகள் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி முதல்முறையாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال