No results found

    பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அடுத்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1 முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. பத்ம விருதுகளுக்கு https://awards.gov.in என்ற முகவரியில் உள்ள தேசிய விருதுகளுக்கான இணையதளத்தில் ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த விருதுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் விருதுகள் மற்றும் பதக்கங்கள் பகுதியிலும், பத்ம விருதுகளுக்கான இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம். இந்த விருதுகளுக்கான சட்டங்கள் மற்றும் விதிகள் குறித்து https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அடுத்த குடியரசு தினத்தன்று விருதுகள் அறிவிக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.
    Previous Next

    نموذج الاتصال