திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான் 9 நாட்கள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். வீதி உலாவை காண இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப தலைமுடி காணிக்கை செலுத்தும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பெண்களுக்கு என தனியாக 214 பெண் சவரத்தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 1.189 சவரத்தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதனால் பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்த நீண்ட நேரம் காத்திருக்காமல் உடனுக்குடன் மொட்டை அடிக்கும் விதமாக 3 சுற்றுகளாக தொழிலாளர்கள் பணிபுரிவார்கள். இதில் பழைய அன்னதான கூடம் எதிரே உள்ள கல்யாண கட்டாவை (முடிகாணிக்கை செலுத்துமிடம்) தவிர பிஏசி-1 , பிஏசி-2 , பிஏசி-3, ஸ்ரீவெங்கடேஸ்வரா ஓய்வறை மற்றும் ஸ்ரீபத்மாவதி ஓய்வறை போன்ற மினி கல்யாண கட்டாக்கள் 24 மணி நேரமும் செயல்படும். ஜிஎன்சி, நந்தகம், எச் விசி, கவுஸ்துபம், சப்தகிரி பக்தர்கள் ஓய்வறைகளில் உள்ள மினி கல்யாண கட்டா அதிகாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.
இவற்றில் சோலார் மூலம் சுடு தண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் குளிப்பதற்கு குளியலறைகளும் உள்ளன. சவரத்தொழிலாளர்களுக்கு பிளேடு, டெட்டாயில், கையுறைகள், சீருடை, பாதுகாப்பு கவச உடை மற்றும் முககவசம் வழங்கப்பட உள்ளது. தோல் தொடர்பான நோய்கள் பரவாமல் தடுக்க ஆண்டிசெப்டிக் லோஷன் பயன்படுத்தப்பட உள்ளது. அனைத்து கல்யாண கட்டாக்களிலும் பக்தர்களுக்கு கணினிமயமாக்கப்பட்ட டோக்கன் இலவசமாக வழங்கப்படுகிறது. கல்யாணக்கட்டாவில் உள்ள அனைத்து அரங்குகளும் போதுமான எண்ணிக்கையிலான துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து சுத்தமாக பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.