No results found

    தந்தையை இழந்தேன் நாட்டை இழக்க மாட்டேன்- ராகுல் டுவிட்டரில் நம்பிக்கை பதிவு

    ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்த ராகுல்காந்தி பின்னர் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- பிரிவினை அரசியலாலும், வெறுப்பாலும் நான் என்னுடைய தந்தையை இழந்தேன். ஆனால் ஒரு போதும் நான் நேசிக்கும் இந்த நாட்டை இழக்க மாட்டேன். வெறுப்பை அன்பால் வெல்லலாம். பயத்தை தன்னம்பிக்கையால் வெல்லலாம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தடைகளை வெல்வோம். இவ்வாறு அந்த பதிவில் ராகுல்காந்தி குறிப்பிட்டிருந்தார்.
    Previous Next

    نموذج الاتصال