No results found

    இந்திய ஒற்றுமை யாத்திரையால் போக்குவரத்து பாதிப்பு - கேரள ஐகோர்ட்டில் வழக்கு

    காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் நடந்து வருகிறது. 13-வது நாளான நேற்று கேரளாவின் சேர்தலா பகுதியில் இருந்து யாத்திரை தொடங்கியது. கொச்சி மாவட்டத்தில் இரவு முகாமிடப்பட்டது. இந்நிலையில், கேரள ஐகோர்ட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இந்திய ஒற்றுமை யாத்திரையால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ள அவர், கேரளாவில் சாலையின் பாதி பகுதியிலேயே யாத்திரை செல்ல அனுமதி வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனுவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கேரள பிரதேச காங்கிரஸ் தலைவர் சுதாகரன் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர். இந்த மனு மீது ஐகோர்ட்டில் நாளை விசாரணை நடைபெற உள்ளது
    Previous Next

    نموذج الاتصال