No results found

    ஸ்ரீமதி வழக்கில் புதிய ஆதாரம்- வெளியான சிசிடிவி காட்சியால் பரபரப்பு

    கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது. மாணவி உயிரிழந்த ஜூலை 13ஆம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் செல்வி தரப்பு பேசியதாக ஆதாரம் வெளியானது. அந்த வீடியோவில், ஸ்ரீமதி தரப்பில் அவரது தாய் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்துள்ளனர். ஸ்ரீமதி ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அன்றைய தினமே பேச்சுவார்த்தை நடந்த காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என செல்வி குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில் தற்போது ஆதாரம் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சக்தி மெட்ரிக் பள்ளியில் உள்ள ஆடிட்டோரியத்தில் பேச்சுவார்த்தை நடந்ததாக சிசிடிவி காட்சிகளின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவில், எதிர்தரப்பில் கள்ளக்குறிச்சி மகாபாரதி பள்ளி நிர்வாகி மோகன் மற்றும் சக்தி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரின் உறவினர்கள் என 4 பேர் பங்கேற்றுள்ளனர்.
    Previous Next

    نموذج الاتصال