No results found

    குஜராத்தில் ஆம்ஆத்மிக்கு ஆதரவாக புயல் வீசுகிறது- கெஜ்ரிவால் சொல்கிறார்

    டெல்லி முதல்-மந்திரியும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாள் பயணமாக சமீபத்தில் குஜராத் சென்று வந்தார். இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள ஆம்ஆத்மி அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினார்கள். கெஜ்ரிவால் வருகைக்கு பிறகுதான் இந்த சோதனை நடந்ததாக உள்ளூர் பா.ஜனதா தலைவர் கூறி இருந்தார். இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:- குஜராத் மக்களிடம் இருந்து எங்களுக்கு அபரிதமான ஆதரவு கிடைத்துள்ளது. இது பா.ஜனதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் ஆம்ஆத்மிக்கு ஆதரவாக புயல் வீசுகிறது. டெல்லியை தொடர்ந்து தற்போது குஜராத்திலும் சோதனை நடை பெற்றுள்ளது. டெல்லியிலும் எதுவும் கிடைக்கவில்லை. குஜராத்திலும் எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் உறுதியான மற்றும் நேர்மையான தேச பக்தியுள்ளவர்கள். இவ்வாறு கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்து பயப்படுவது ஏன்? என்று பா.ஜனதாவிடம் கேட்க விரும்புகிறேன் என்று துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
    Previous Next

    نموذج الاتصال