No results found

    அவசரமாக தரையிறங்கிய விமானம் - உயிர் தப்பிய இம்ரான்கான்

    பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் தனி விமானத்தில் புறப்பட்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கு திரும்பியது. இஸ்லாமாபாத்தில் இருந்து சாலை மார்க்கமாகப் பயணித்து குஜ்ரன்வாலா சென்ற இம்ரான்கான், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதுதொடர்பாக விளக்கமளித்த இம்ரான்கான் கட்சியின் மூத்த தலைவர் அசார் மஷ்வானி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தரையிறங்கியதாக வெளியான தகவல் தவறானது. மோசமான வானிலையால் இம்ரான்கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Previous Next

    نموذج الاتصال