No results found

    டெல்லியில் நேதாஜி சிலை அருகே பிரமாண்ட டிரோன் கண்காட்சி

    டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 28 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். சிலை திறப்பையொட்டி நேதாஜியின் வாழ்க்கை குறித்த டிரோன் கண்காட்சி இந்தியா கேட் பகுதியில் நேற்று முதல் 11-ந்தேதி வரை நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று இரவு 8 மணிக்கு பிரமாண்ட டிரோன் கண்காட்சி நடந்தது. நேதாஜியின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக வானத்தில் டிரோன்கள் பறந்து ஒளிர செய்தன. இதில் நேதாஜியின் உருவப்படம் மற்றும் நேதாஜியின் பிரமாண்ட சிலை, ஜெய்ஹிந்த் உள்ளிட்ட 8 வெவ்வேறு வடிவங்களை டிரோன்களால் வானில் ஒளிபரப்பப்பட்டது. மொத்தம் 250 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியை மக்கள் தங்களது செல்போன்களில் ஆர்வமுடன் படம் பிடித்தனர். நாட்டுப்புற மற்றும் பழங்குடி கலைஞர்கள் பங்கேற்ற கலாச்சார நிகழ்ச்சியும் நடந்தது.
    Previous Next

    نموذج الاتصال